எரிபொருள், நிலக்கரிக்காகவே இராஜ்ஜியங்கள் கைப்பற்றப்பட்டது - நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர்

Kanimoli
2 years ago
எரிபொருள், நிலக்கரிக்காகவே இராஜ்ஜியங்கள் கைப்பற்றப்பட்டது - நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர்

  எரிபொருள், நிலக்கரிக்காகவே உலக நாடுகள் சண்டையிட்டுக் கொண்டதாகவும் இதனால் இராஜ்ஜியங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் தெரிவித்தார்.

  இதனால் தான் இரத்தத்தைவிட எரிபொருள் விலை அதிகமென சிலர் கூறுகிறார்கள் என ரத்தன தேரர் தெரிவித்தார்.

சூரிய சக்தி, காற்றாலை உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க சக்திகளிடமிருந்து மின்சாரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டு்ம் எனவும் அவர் கூறினார்.

எரிபொருளை எரித்து அதனூடாக மின்சாரத்தைப் பெறுவதை நிறுத்த வேண்டும் என்றும், இதற்கு அதிகளவில் செலவிட வேண்டும் என்பதால், மின்சாரக் கட்டணம் உயர்வதை தடுக்க முடியாது எனவும் தேரர் தெரிவித்தார்.

அதேசமயம் பெற்றோல் விலையை அதிகரித்தால் பிரச்சினை இல்லை என தெரிவித்த ரத்தன தேரர், டீசல் விலையை அதிகரிக்கக்கூடாது எனவும் கூறினார்.   

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!