கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் செயற்பாடுகளை முடக்கும் நடவடிக்கைகளில் அமைப்புக்ள் ஈடுப்படுகிறது - நாடாளுமன்ற உறுப்பினர் கலையரசன்

Kanimoli
2 years ago
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் செயற்பாடுகளை முடக்கும் நடவடிக்கைகளில் அமைப்புக்ள்  ஈடுப்படுகிறது - நாடாளுமன்ற உறுப்பினர் கலையரசன்

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் செயற்பாடுகளை முடக்கும் நடவடிக்கைகளில் பல அரசியல்வாதிகளும், அடிப்படை சிந்தனை கொண்ட அமைப்புக்களும் ஈடுப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கலையரசன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(29) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,"கல்முனையில் தொடர்ச்சியாக 33 வருடங்கள் வடக்கு பிரதேச செயலகத்தின் செயற்பாடுகளை இல்லாமல் செய்கின்ற செயல்களில் பலர் ஈடுப்பட்டுள்ளனர்.

இலங்கையின் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணைய தளத்திலிருந்து கல்முனை வடக்கு பிரதேச செயலகம் நீக்கப்பட்டுள்ளதாக நான் அறிகின்றேன்.

இந்த பிரதேச செயலகம் தொடர்பில் அமைச்சரவை தீர்மானம் எடுக்கப்பட்ட பின்னர் அதனை நீக்கும் அதிகாரம் யாரால் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் அவ்வாறு நீக்கப்படுவதற்கான சந்தர்ப்பங்கள் ஏதேனும் உள்ளதா? என்பதை நான் அறிய விரும்புகின்றேன்.

ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை உள்ளடக்கிய பிரதேச செயலகம் தான் இந்த கல்முனை வடக்கு பிரதேச செயலகம்.

இங்கு தமழ் பேசும் இனம் என்று தான் நாங்கள் பேசுகின்றோம் ஆனால் இந்த சாதகமான நிலையை பயன்படுத்தி எமது முஸ்லிம் சகோதரர்கள் எங்களை கூரு போடும் செயற்பாடுகளையே தமழ் மக்கள் மத்தியில் தொடர்ந்து செய்கின்றனர்."என கூறியுள்ளார்.    

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!