இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் நிர்வாகத்திற்கு எதிராக போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் மற்றும் பொறியியலாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அவர்களது நிர்வாகத்திற்கு எதிராக போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இந்த போராட்டமானது இன்று கொழும்பு 02 – கங்காரம பகுதியில் அமைந்துள்ள அரச பொறியியல் கூட்டுத்தாபன அலுவலகத்திற்கு முன்னால் இடம்பெற்றுள்ளது.
இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் மற்றும் பொறியியலாளர்களுக்கு ஆகஸ்ட் மாத சம்பளம் இதுவரை வழங்கப்படாத நிலையில், வழங்கப்படும் திகதி குறித்தும் இதுவரை எவ்வித அறிவிப்புக்களும் வெளியாகவில்லையென தெரிவித்து இவர்கள் எதிர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
நாட்டின் பொருளாதார நெருக்கடிநிலை காரணமாக நிர்மாணப்பணிகள் அனைத்தும் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பலர் வேலை இழக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது எனவே இவற்றை முன்னிறுத்தியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.



