ஐந்து மாதங்களில் அரசாங்க வரி வருமானம் 29 வீதமாக உயர்வடைந்துள்ளது- மத்திய வங்கி
Prabha Praneetha
2 years ago

அரசாங்கத்தின் வரி வருமானம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் அரசாங்க வரி வருமானம் 29 வீதமாக உயர்வடைந்துள்ளது.
811.9 பில்லியன் ரூபா வரி வருமானம் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்கத்தின் செலவுகள் 16 வீதமாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அரசாங்க வருமானங்களுக்கும் செலவுகளுக்கும் இடையிலான துண்டுவிழும் தொகை 636.7 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.
அரசாங்கத்தின் மூலதன செலவு ஆண்டின் ஆரம்பத்தில் 162.4 பில்லின் ரூபாவாக காணப்பட்டதாகவும், ஐந்து மாதங்களின் பின்னர் அந்த தொகை 174.2 பில்லியன் ரூபாவாக காணப்படுவதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



