இலங்கையில் கையடக்க தொலைபேசிகளின் விலைகள் எதிர்காலத்தில் பாரியளவில் அதிகரிக்கும் நிலை - இந்திரஜித் பெரேரா

இலங்கையில் கையடக்க தொலைபேசிகளின் விலைகள் எதிர்காலத்தில் பாரியளவில் அதிகரிக்கும் நிலை காணப்படுவதாக அகில இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திரஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கையடக்கத்தொலைபேசிகள் மற்றும் உபகரணங்களின் இறக்குமதியை கட்டுப்படுத்துவதன் மூலம் விலைகள் சடுதியாக அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு விலைகள் அதிகரிக்குமானால் ஒரு சில வர்த்தகர்களுக்கு நன்மை கிடைக்கும் அதே வேளை மக்கள் பாரிய அளவில் பாதிப்படைவார்கள்.
கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் சாதனங்களின் அதிகரிப்பு நிச்சயமற்ற நிலைமையாக மாறியுள்ளது. அதற்காக மக்களிடம் மன்னிப்புக் கோருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் 300 இற்கும் மேற்பட்ட பொருட்களின் இறக்குமதிகளுக்கு மறு அறிவித்தல் வரை தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.



