குழந்தைகளின் போசாக்கு குறைபாடு: உலகில் 6வது இடத்தில் உள்ளது இலங்கை! தெற்காசியாவில்இரண்டாவது இடத்தில்...

ழந்தைகளின் போசாக்கு குறைபாட்டின் அடிப்படையில் இலங்கை உலகளவில் 6வது இடத்தில் உள்ளது.
யுனிசெப் அமைப்பின் கூற்றுப்படி, தெற்காசியாவில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்கொள்ளும் நாடுகளில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது.
அதிக பணவீக்கம் உள்ள நாடுகளில் இலங்கை 5வது இடத்தில் உள்ளது, மேலும் ஊட்டச்சத்து நிறைந்த உணவு கிடைக்காமல் குழந்தை தலைமுறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.
இதனால் உணவு வாங்க முடியாமல் பல குடும்பங்கள் அன்றாட உணவை தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது.
அத்துடன், இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு இரண்டு குழந்தைகளில் ஒருவருக்கு ஏதாவது ஒரு அவசர உதவியை வழங்க வேண்டிய தேவை ஏற்கனவே உள்ளதாக கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அந்த அமைப்பு அறிவித்தது.
யுனிசெப்பின் தெற்காசியப் பிராந்தியத்தின் இயக்குநர் திரு. ஜார்ஜ் லாரி அட்ஜே கூறியதாவது:
நாடு இவ்வாறானதொரு நெருக்கடியில் இருக்கும் வேளையில், சுகாதாரம் மற்றும் கல்வியில் இலங்கை அடைந்துள்ள சாதனைகளைப் பாதுகாக்க உதவுமாறு UNICEF என்ற வகையில் சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம்.
நெருக்கடியின் மத்தியில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில், கவனம் செலுத்த வேண்டிய பகுதிகள் இன்னும் உள்ளன. ஒன்று குழந்தைகள் மத்தியில் ஊட்டச்சத்து குறைபாட்டின் மீது கவனம் செலுத்துவது.
குழந்தைகளின் போசாக்கு குறைபாட்டின் அடிப்படையில் இலங்கை உலகளவில் 6வது இடத்தில் உள்ளது. இலங்கையின் குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு நாம் உதவ வேண்டிய நேரம் இது என்று மீண்டும் சர்வதேச சமூகத்திடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.



