வெள்ளத்தில் தத்தளிக்கும் பாகிஸ்தான்,முற்றிலும் அழிந்த 2 லட்சம் வீடுகள்-அறிக்கை வெளியிட்ட ஐ.நா

#Pakistan #Flood
Prasu
2 years ago
வெள்ளத்தில் தத்தளிக்கும் பாகிஸ்தான்,முற்றிலும் அழிந்த 2 லட்சம் வீடுகள்-அறிக்கை வெளியிட்ட ஐ.நா

பாகிஸ்தான் நாட்டில் தென் மேற்கு பருவமழைக் காலம் துவங்கிய நிலையில் சென்ற 3 மாதங்களாக அங்கு கன மழை, வெளுத்து வாங்கி வருகிறது. சென்ற 30 வருடங்களில் இல்லாத இந்த மழைப் பொழிவால் பாகிஸ்தானின் பாதி நகரங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. 

இந்த கனமழை மற்றும் வெள்ளத்துக்கு நாடு முழுதும் சுமார் 3.30 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் வெள்ளம் அதிகம் பாதித்த 110 மாவட்டங்களில் சுமார் 57 லட்சம் பேர் தங்கும் இடம் மற்றும் உணவு இன்றி இருக்கின்றனர். 

பாகிஸ்தான் நாட்டில் கன மழை, வெள்ளத்துக்கு இதுவரையிலும் 982 பேர் பலியாகி இருக்கின்றனர் என தேசிய பேரிடர் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதேபோன்று கன மழை, வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் 113 பேருக்கு படுகாயங்களும், 1,456 பேருக்கு லேசான காயங்களும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாடு முழுதும் மழை, வெள்ள பாதிப்புகளை சமாளிக்கும் விதமாக அவசர நிலையை பிரகடனப்படுத்தி, அரசு மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகிறது. 

இந்நிலையில் ஐ.நா.வின் மனித நேய விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், 2.18 லட்சம் வீடுகள் முற்றிலும் அழிந்துள்ளது. 

4.58 லட்சம் வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளது என்று தெரிவித்துள்ளது. இது தவிர்த்து 20 லட்சம் ஏக்கர் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. 

7.94 லட்சம் கால்நடைகள் உயிரிழந்துள்ளன எனவும் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!