சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தத்தை கெடுக்க இம்ரான் கான் முயல்கிறார் - பாகிஸ்தான் பிரதமர் குற்றச்சாட்டு

#Pakistan
Prasu
2 years ago
சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தத்தை கெடுக்க இம்ரான் கான் முயல்கிறார் - பாகிஸ்தான் பிரதமர் குற்றச்சாட்டு

பாகிஸ்தான் நாட்டில் நிதி நெருக்கடி ஏற்பட்டிருப்பதால் அதனை சமாளிக்க பிரதமர் ஷெபாஸ் செரீப் அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி சர்வதேச நாணய நிதியத்திடம் 170 கோடி நிதி வழங்குமாறு கோரிக்கை வைத்திருக்கிறது. இது குறித்து சர்வதேச நாணய நிதியம் நாளை ஆலோசிக்கவுள்ளது.

இந்நிலையில் பிரதமர் செபாஸ் செரீப், நாட்டின் முன்னாள் பிரதமராக இருந்த இம்ரான் கானுடைய கட்சி சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தங்களை கெடுக்க முயன்று கொண்டிருக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார். 

மேலும், பிரதமர் சிந்து மாகாணத்தில் வெள்ளத்தில் பாதிப்படைந்த பகுதிகளை ஆய்வு செய்த போது கூறியதாவது, இவ்வாறான சுயநலமான அரசியலை கண்டதில்லை. இது நாட்டிற்கு செய்யப்பட்ட அநீதி மற்றும் பெரிய சதி என்று கூறியிருக்கிறார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!