40 கிலோ போதைப்பொருளுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது!
Prathees
2 years ago

பேலியகொட பிரதேசத்தில் 40 கிலோ 682 கிராம் போதைப்பொருளுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேலியகொட பொலிஸ் நிலைய அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட விஷ போதைப்பொருள் தொடர்பான சுற்றிவளைப்பின் போதே இது இடம்பெற்றுள்ளது.
வத்தளை மற்றும் நாத்தாண்டியா பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபர்களே இதன்போது கைது செய்யப்பட்டன்.
போதைப் பொருட்கள் கைமாற்றப்டபட்ட வேளையிலே இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இது தொடர்பான உண்மைகளை தெரிவித்துள்ளார்.



