விமான நிலையத்தில் இரண்டு கோடிக்கு மேல் பெறுமதியான தங்கம் மற்றும் வெள்ளி நகைகளுடன் பெண்ணொருவர் கைது

இந்தியாவில் இருந்து இரண்டு இலட்சத்து முப்பத்து மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான வெள்ளி ஆபரணங்கள் மற்றும் தங்க நகைகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த இலங்கை வர்த்தக பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று அதிகாலை சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் வசிக்கும் 38 வயதுடைய வர்த்தக பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியன் எயார்லைன்ஸின் AI-273 விமானத்தில் இந்தியாவின் சென்னையில் இருந்து இன்று அதிகாலை 02.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
அவள் கொண்டு வந்த லக்கேஜில் 01 கிலோ 638 கிராம் எடையுள்ள தங்கநகைகள் மற்றும் 01 கிலோ 600 கிராம் எடையுள்ள வெள்ளி நகைகள் கையிருப்பு காணப்பட்டு சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முறையான சுங்க விசாரணையை பிரதி சுங்கப் பணிப்பாளர் திருமதி டி.பிரசாந்த் மேற்கொண்டார்இ அங்கு இந்த ஆபரணங்கள் அனைத்தையும் பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டதுடன்இ அவருக்கு 30இ000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.



