இரத்தினக்கல் தோண்டிய பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட குழுவினர் கைது

அனுமதியின்றி சுற்றுச்சூழலை அழித்து இரத்தினக்கல் தோண்டிய சப்-இன்ஸ்பெக்டர் (28) உள்ளிட்ட சந்தேகநபர்கள் ஐவர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
நோர்வூட் பொலிஸ் பிரதேசத்தில் சொந்தமான போற்றி தோட்டத்திலிருந்து காஸல் நீர்த்தேக்கத்திற்கு செல்லும் போற்றி கால்வாயில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவித்துஇ மாணிக்கக் கற்கள் தோண்டுவதில் ஒரு குழுவினர் ஈடுபட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் (28) அதிகாலை 6 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் மஸ்கெலியா பொலிஸ் சுற்றாடல் பிரிவின் நிலைய கட்டளைத் தளபதி என்றும் அவர் மஸ்கெலியா பகுதியைச் சேர்ந்த இரண்டு சந்தேக நபர்களுடனும் நோர்வூட் பகுதியைச் சேர்ந்த மூன்று சந்தேக நபர்களுடனும் தொடர்பு கொண்டிருந்ததாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட ஆறு சந்தேக நபர்களையும் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.



