பாராளுமன்ற உறுப்பினர்கள் வீடுகள், வாகனங்கள் மற்றும் காரியாலயங்கள் உட்பட சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் மூவர் கைது

#SriLanka #Protest #Arrest
Prasu
2 years ago
பாராளுமன்ற உறுப்பினர்கள் வீடுகள், வாகனங்கள் மற்றும் காரியாலயங்கள் உட்பட சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் மூவர் கைது

மே 9 வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் மூவர்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது

கடந்த மே 9 ஆம் திகதி நடைபெற்ற அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் பின்னர் இடம்பெற்ற வனமுறைகளின் போது பாராளுமன்ற உறுப்பினர்களான மிலான் ஜயதிலக்க, லசந்த அலகியவன்ன  அருந்திக்க பெர்னாண்டோ ஆகியோரின் வீடுகள், வாகனங்கள் மற்றும் காரியாலயங்கள் உட்பட சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் குறித்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 53, 26, 30 வயதுடைய கிரிந்திவெலஇ ஊரபொல மற்றும் லிஹினியாகம பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.

சம்பவம் தொடர்பில் மேல் மாகாண குற்றத்தடுப்பு பிரிவினர் மற்றும் தங்கொட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!