யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் விடுதியின் அறை ஒன்றில் தீ விபத்து
Kanimoli
2 years ago

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் விடுதியின் அறை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக கனடா நாட்டில் இருந்து வந்து குறித்த விடுதியில் தங்கியிருந்தவர்களின் உடைமைகள் அனைத்தும் எரிந்து சாம்பலாகியுள்ளது.
விடுதி அறையில் உள்ள குளிரூட்டியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகவே குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



