இலங்கையின் எரிபொருள் சந்தையில் பிரவேசிக்க பல நாடுகள் விருப்பம்
Prathees
2 years ago

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இருபத்தி நான்கு நிறுவனங்கள் நாட்டின் எரிபொருள் சந்தையில் பிரவேசிப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் திரு.காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
முன்மொழிவுகள் குறித்து விசாரணை நடத்த குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, அமெரிக்கா, சீனா, இந்தியா, நோர்வே, மலேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன.



