பாதுகாக்கப்பட்ட இனங்கள் பட்டியலில் இருந்து காட்டு யானையை நீக்காமலிருக்க முடிவு

Prathees
2 years ago
பாதுகாக்கப்பட்ட இனங்கள் பட்டியலில் இருந்து காட்டு யானையை நீக்காமலிருக்க முடிவு

பயிர் சேதத்தை ஏற்படுத்தினாலும் காட்டு யானையை பாதுகாக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

பாதுகாக்கப்பட்ட விலங்கு பிரிவில் இருந்து காட்டு யானை நீக்கப்பட்டால், காட்டு யானைகள் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்இ சுற்றுலாத்துறை மூலம் நாட்டுக்கு அதிக வருமானம் கிடைப்பதால் காட்டு யானையை தேசிய வளமாக பாதுகாக்க வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீரவினால்வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்தை குறைப்பதற்கான விஷயங்களை ஆராய சமீபத்தில் ஒரு குழுவும் நியமிக்கப்பட்டது.

மேற்படி குழுவின் பரிந்துரைகளின்படி, பயிர்களை சேதப்படுத்தும் விலங்குகளாக மயில், காட்டுப்பன்றிஇ எருமை, குரங்கு,காட்டு யானை போன்ற விலங்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

எனினும், காட்டு யானை பாதுகாக்கப்பட்ட விலங்கு வகையைச் சேர்ந்தது என்பதால், பயிர் சேதத்தை ஏற்படுத்தும் விலங்குகள் பட்டியலில் இருந்து காட்டு யானையை நீக்க சம்பந்தப்பட்ட குழு முடிவு செய்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!