ஜனாதிபதியின் வரவு செலவு திட்டத்திற்கு பசில் குழு எதிர்ப்பு...?

எதிர்காலத்தில் நியமிக்கப்படவுள்ள அமைச்சர்களுக்கு சலுகைகள் வழங்கப்படாவிட்டால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்படும் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிப்போம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பசில் ராஜபக்சவை ஆதரிக்கும் குழு தெரிவித்துள்ளதாக சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு இன்னும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளது.
இதன்படி இராஜாங்க அமைச்சர்களுக்கு பிரத்தியேக செயலாளர், பத்திரிக்கை செயலாளர் மற்றும் மூன்று ஒருங்கிணைப்பு செயலாளர்கள் உள்ளதாகவும் அவர்கள் ஐவருக்கும் தனித்தனி வாகனங்கள் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இராஜாங்க அமைச்சர்கள் ஐந்து அலுவலக ஊழியர்கள், மூன்று வாகனங்கள் மற்றும் அமைச்சர்கள் அனுபவிக்கும் இதர சலுகைகளுக்கு உரிமை உண்டு.
மேலும், அவர்களின் சம்பளம், அமைச்சர்களின் சம்பளத்துக்கு இணையாக இருக்கும்.
இராஜாங்க அமைச்சர்களின் பட்டியலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது தயாரித்து வருவதாக குறிப்பிடும் சண்டே டைம் பத்திரிகை, எத்தனை இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என்பது குறித்து இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை.
இடைக்கால வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னதாகவே அரச அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதாலும், சர்வகட்சி ஆட்சியை நியமிப்பதிலும் சற்று சிக்கல் ஏற்பட்டுள்ளதாலும், புதிய அமைச்சரவையை நியமிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தற்போதுள்ள அமைச்சரவை மற்றும் பல கட்சிகளை உள்ளடக்கி முன்னோக்கி செல்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.



