காணிச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ் பிரதிகளின் விலையை உயர்த்துவது குறித்து கவனம்

பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வழங்கப்படும் காணிச் சான்றிதழ் பத்திரப் பிரதிகள்,பிறப்புச் சான்றிதழ் நகல்கள் போன்ற எழுதுபொருட்களின் விலையை உயர்த்துவதற்கு திணைக்களம் தயாராகி வருகின்றது.
மின்கட்டண உயர்வு, எழுதுபொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட அனைத்து செலவுகளும் அதிகரித்துள்ளதால், துறையால் தாங்க முடியாத வகையில் செலவுகள் அதிகரித்துள்ளது.
அதனை ஓரளவு ஈடு செய்யும் வகையில் ஆவணங்களின் விலையை அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தற்போது திணைக்களம் சாதாரண சேவையின் கீழ் 120 ரூபாவிற்கு காணிச் சான்றிதழையும் 100 ரூபாவிற்கு பிறப்புச் சான்றிதழையும் வழங்குகிறது.
முதலில் அந்த விலைகளில் மாற்றம் செய்யப்படும் என்றும் அதன் பின்னர் ஒரு நாள் சேவையின் கீழ் வழங்கப்படும் சேவைகளின் விலையை அதிகரிப்பது குறித்து இறுதி உடன்பாடு எட்டப்படும் என்றும் அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.



