இன்றைய வேத வசனம் 28.08.2022: தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்

Prathees
1 year ago
இன்றைய வேத வசனம் 28.08.2022: தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்

ஒரு தொழிலதிபர் தனது காரில் தன்னுடைய அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தபோது ஒரு வாலிபன் மயங்கிய நிலையில் ரோட்டின் ஓரம் விழுந்து கிடந்தான்.

இதைப்பார்த்த தொழிலதிபர் அவனருகே சென்று அவன் முகத்தில் தண்ணீர் தெளித்து அவனுக்கு தண்ணீர் கொடுத்து அவனை தனது காரில் ஏற்றிக்கொண்டு தன் அலுவலகத்திற்கு சென்றார்.

பிறகு அந்த வாலிபனை தனது அறைக்கு அழைத்து சென்று அவனை பற்றி விசாரித்தார்.

அப்பொழுது அந்த வாலிபன் ஒரு பட்டதாரி என்றும், வேலைத்தேடி சென்றுக்கொண்டிருந்த போது களைப்பில் மயங்கி விழுந்து விட்டேன் என்றும் கூறினான்.

அதைக் கேட்ட தொழிலதிபர் அந்த வாலிபனுக்கு தன்னுடைய அலுவலகத்தில் வேலைக் கொடுத்தார்.

ஆரம்பத்தில் அவன் எல்லாரிடமும் தன் முதலாளியிடமும் மிகவும் பணிவுடன் நடந்து கொண்டு வந்தான். அவனது முதலாளி அவனை மிகவும் நேசித்தார்.

நல்ல பழக்க வழக்கங்களை உடயவனாய் இருந்த அவன் நாளுக்கு நாள் விகற்பமான செய்கைகளை செய்து வந்தான்.

இது பற்றி அலுவலகத்தில் உள்ள அனைவரும் தங்கள் முதலாளியிடம் அவனைப்பற்றி புகார் செய்து வந்தனர்.

நாள்தோறும் அவனைக் கவனித்துக் கொண்டே வந்த முதலாளி அவனைக் கூப்பிட்டு எச்சரித்தார். ஆனாலும், அவன் ஒருவருக்கும் செவிகொடுக்க மனதாயிராமல் தன் இஸ்டபடி செய்து வந்தான்.

நிலமை அத்துமீறிப்போக மிகவும் மனஸ்தாபப்பட்டு அவனை அந்த அலுவலகத்தில் இருந்தே வெளியே துரத்தி விட்டார் அந்த தொழிலதிபர்.

இன்றைக்கு நம்முடைய வாழ்க்கையில் கர்த்தர் நம்மைக் கிருபையாக நடத்தி வருகிறார். ஆனால், நாம் அந்தக் கிருபையை அசட்டை செய்து பாவ சேற்றில் மூழ்கி ஓடிக் கொண்டிருக்கிறோம்.

நம்முடைய அனுதின வாழ்வில் நம்முடை செய்கைகள், நடக்கைகள் தேவனை மகிழ்ச்சி அடையச் செய்கின்றதா? அல்லது மனஸ்தாபப்பட வைக்கின்றதா? சிந்தித்துப் பார்ப்போம்.

ஆதியாகமம் 6:5-6

5.மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டு,

6.தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்; அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது.