இலங்கை மாணவர்களுக்கு முழுமையான புலமைப்பரிசில்களை வழங்கும் சீனா!
Mayoorikka
2 years ago

18 இலங்கை மாணவர்களுக்கு முழுமையான புலமைப்பரிசில்களை வழங்க சீனா ஏற்பாடு செய்துள்ளது.
இதன்படி, 7 இளங்கலை மாணவர்களுக்கும், 10 முதுகலை மாணவர்களுக்கும், ஒரு கலாநிதி பட்டப்படிப்பை தொடரவுள்ள மாணவருக்கும் இந்த உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
இந்த மாணவர்கள் சீனாவில் உள்ள 15 பெரிய பல்கலைக்கழகங்களில் கல்வி கற்க உள்ளனர். மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு இலங்கைக்கான சீனத் தூதுவர் சி ஷென்ஹோங் தலைமையில் நடைபெற்றது.



