மனித உரிமை மீறல் என கூறி அரசுக்கு எதிராக மேல்முறையீடு செய்த 77 பேரைக் கொன்ற குற்றவாளி

Prasu
2 years ago
மனித உரிமை மீறல் என கூறி அரசுக்கு எதிராக மேல்முறையீடு செய்த 77 பேரைக் கொன்ற குற்றவாளி

நார்வே நாட்டில் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த அண்டர்ஸ் பெஹ்ரிங் ப்ரீவிக் என்பவர் கடந்த 2011-ஆம் ஆண்டு வெடிகுண்டு வைத்தார். அதோடு இவர் இடதுசாரி இளைஞர்களுக்கு ஆதரவாக பேசிய இளைஞர்கள் மீதும் துப்பாக்கி சூடு நடத்தினார். 

இந்த வீடியோ தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூட்டினால் 77 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த 2012-ம் ஆண்டு பீரிவிக்கை ஆபத்தான குற்றவாளி என அறிவித்து 23 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தனிமை சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டார்.

இவர் தற்போது தன்னை விடுவிக்குமாறு கூறி நீதித்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். 

அந்த கடிதத்தை விசாரித்த நீதிபதிகள் ப்ரீவிக்கை ஒரு ஆபத்தான குற்றவாளி என்று கருதி, அவரை 23 வருடங்கள் தாண்டி கூட தனிமை சிறையில் அடைத்து வைப்பதே பொதுமக்களுக்கு நல்லது என்று கூறியுள்ளனர். 

இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்த பிரீவிக், தன்னை தனிமை சிறையில் அடைத்து வைத்து, தரமில்லாத உணவுகளை கொடுப்பது மனித உரிமை மீறல் என கூறி அரசுக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!