துருக்கி தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தின் கீழ் உக்ரைன் துறைமுகங்களில் இருந்து வெளியேறிய 3 கப்பல்கள்

#Ukraine
Prasu
2 years ago
துருக்கி தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தின் கீழ் உக்ரைன் துறைமுகங்களில் இருந்து வெளியேறிய 3 கப்பல்கள்

துருக்கி தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தின் கீழ் மேலும் 3 கப்பல்கள் உக்ரைன் துறைமுகங்களில் இருந்து வெளியேறியதாக துருக்கி தேசிய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கி 185 நாட்கள் முடிவுற்றுள்ளது. 

பொருளாதார ரீதியாக கடும் பின்னடைவை இரு நாடுகளும் எதிர் கொண்டு வருகின்றது. இந்த சூழலில் தானிய ஏற்றுமதியை மட்டுமே நம்பி இருந்த உக்ரைனுக்கு பேரு உதவியாக துருக்கியும் ஐக்கிய நாடுகள்  களமிறங்கிய நிலையில் இதுவரை ஒரு மில்லியன் டன் தானியங்கள் உக்ரைன் துறைமுகங்களில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி கூறியுள்ளார். 

இதற்கிடையே துருக்கி தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தின் கீழ் மூன்று கப்பல்கள் உக்ரைன் துறைமுகங்களில் இருந்து வெளியேறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் மேலும் மூன்று கப்பல்கள் தானியங்களையும் நிரப்பும் பணி முடிவடைந்து தயார் நிலையில் இருப்பதாக தகவல் கூறப்பட்டுள்ளது. 

கடந்த ஜூலை மாதம் துருக்கி ஐக்கிய நாடுகள் மன்றம் ரஷ்யா மற்றும் உக்ரைன் போன்ற நாடுகள் இஸ்தான்புலில் ரஷ்யா உக்ரைன் போரின் காரணமாக ஏற்றுமதியை நிறுத்தப்பட்ட மூன்று உக்ரைன் கருங்கடல் துறைமுகங்களில் இருந்து தானிய ஏற்றுமதியை மீண்டும் தொடங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருக்கிறது. 

இதனை அடுத்து உக்ரைன் துறைமுகங்களில் இருந்து தானியங்கள் வெளியேறத் தொடங்கி இருக்கிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!