இந்தாண்டு கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்தது - உலக சுகாதார அமைப்பு

#Covid 19 #WHO
Prasu
2 years ago
இந்தாண்டு கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்தது - உலக சுகாதார அமைப்பு

கொரோனா வைரஸ் தொற்று உருவாகி இரண்டரை ஆண்டுகளைக் கடந்தும், அந்த வைரஸ் இன்னும் முழுமையாக ஓயவில்லை. பல்வேறு நாடுகளில் உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் அதிகமாக பரவி வருகிறது. 

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு இந்த ஆண்டு மட்டும் 10 லட்சம் பேர் பலியாகி உள்ளனர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கூறுகையில், கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்படும் மரணங்களைத் தடுப்பதற்குத் தேவையான அனைத்துக் கருவிகளையும் வைத்திருக்கிறோம். 

தற்போது இந்த ஆண்டு மட்டும் 10 லட்சம் பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். 

அனைத்து சுகாதாரப் பணியாளர்கள், முதியவர்கள் மற்றும் அதிக ஆபத்தில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான முயற்சிகளை வலுப்படுத்துமாறு அனைத்து அரசாங்கங்களையும் கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!