பிலிப்பைன்சில் நடுக்கடலில் தீப்பிடித்த பயணிகள் கப்பல் - 80 பேர் மீட்பு
#Phillipines
Prasu
2 years ago

பிலிப்பைன்ஸ் நாட்டின் ஓரியண்டல் மிண்டோரோ மாகாணத்தில் உள்ள கலபன் நகரில் இருந்து பயணிகள் கப்பல் ஒன்று தலைநகர் மணிலாவின் தெற்கு துறைமுகத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது.
அதில் 49 பயணிகள் மற்றும் 38 பணியாளர்கள் இருந்தனர். துறைமுகத்தை நெருங்கியபோது கப்பலில் தீப்பிடித்தது.
அப்போது கப்பல் துறைமுகத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. கப்பல் முழுவதும் தீ பரவியதால் பலர் கடலில் குதித்தனர்.
உடனே கடலோர காவல்படையினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். கடலில் தத்தளித்தவர்களை மீட்டனர். 80-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர்.
2 பேரை காணவில்லை. அவர்களை தேடி வருகிறார்கள். கப்பலின் என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீப்பிடித்ததாக தெரிகிறது.



