தென்னைச் செய்கை சபையில் 7 கோடி ரூபாய் மோசடி: கணவருடன் சேர்ந்து கணக்கு எழுத்தாளர் சிறையில்

Prathees
2 years ago
தென்னைச் செய்கை சபையில் 7 கோடி ரூபாய் மோசடி:  கணவருடன் சேர்ந்து கணக்கு எழுத்தாளர் சிறையில்

தென்னைச் செய்கை சபையின் ஊழியர் சேமலாப நிதியை மோசடி செய்த குற்றச்சாட்டில் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட கணக்கு எழுதுனர் மற்றும் அவரது கணவரை   எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல நீதவான் சாமினி விஜேபண்டார நேற்று  உத்தரவிட்டார்.

தென்னைச் செய்கை சபையில் கணக்கு எழுத்தராக கடமையாற்றும் மொனராகலை ஒக்கம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்.எம். தமரா தில்ஹானி மற்றும் ஆர்.டி. உபுல் ரத்நாயக்க ஆகிய தம்பதியினரே 
இவ'வாறு சிறையில் அடைக்கப்பட்டனர்.

1921 ஆம் ஆண்டு 46 ஆம் இலக்க தென்னை அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட தென்னை பயிர்ச் செய்கை சபையின் வருங்கால வைப்பு நிதியில், 2015 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை ஏழு கோடியே முப்பத்தி எட்டு இலட்சத்து முப்பத்தொன்பதாயிரத்து முந்நூற்று அறுபத்து ஒன்பது ரூபாய்முப்பத்து ஏழு சதம் (ரூ. 7,383,936,9. 37) மோசடி செய்யப்பட்டதாக தென்னை அபிவிருத்திச் சபையினால் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பில் தென்னை அபிவிருத்திச் சபையின் ஊழியர்கள் 10 பேர் சந்தேகநபர்களாக கைது செய்யப்படவுள்ளதுடன்இ குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் உண்மைகளை முன்வைத்து வருகின்றனர்.

சந்தேகநபர்கள் இலங்கை தண்டனைச் சட்டத்தின் 386, 389, 403 மற்றும் பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் குற்றங்களைச் செய்துள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்தது.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் உண்மைகளை முன்வைத்து, தென்னை அபிவிருத்திச் சபையின் 08 ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் பெயரில் 51 கடிதங்கள் மூலம் இந்தப் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரான  சட்டத்தரணி ரியென்சி அசகுலரத்ன, தனது வாடிக்கையாளர் மூன்று பிள்ளைகளின் தாய் எனவும் இளைய குழந்தைக்கு மூன்று மாத வயது எனவும் தெரிவித்தார்.

இதனையடுத்து, கருணை அடிப்படையில் அவருக்கு பிணை வழங்குமாறு ஜனாதிபதியின் சட்டத்தரணி கோரினார்.

ஏறக்குறைய எட்டு கோடி ரூபா பெறுமதியான மோசடி தொடர்பிலேயே இந்த குற்றச் செயல் இடம்பெற்றுள்ளதாக தென்னைப் பயிர்ச் செய்கை சபையின் சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி கமால் விஜேசிறி தெரிவித்தார்.

641 ஊழியர்களைக் கொண்ட அந்த வாரியத்தின் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியிலிருந்து இந்த சந்தேக நபர்கள் பெரும் தொகையை மோசடி செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் சபையின் சுமார் பத்து ஊழியர்களை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ள நிலையில், சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கப்படுமாயின் சந்தேகநபர்களின் பிணைக்கு எதிர்ப்பு எழலாம் எனவும் சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!