சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 5.5 மில்லியன் பெறுமதியான தங்கங்களுடன் ஒருவர் கைது

#SriLanka #Arrest
Prasu
2 years ago
சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட  5.5 மில்லியன் பெறுமதியான தங்கங்களுடன் ஒருவர் கைது

வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட ஐந்து கோடியே ஐம்பது இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேக நபர் நேற்று (26) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சந்தேகநபர் பிரான்ஸில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தின் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதோடு அவர் சுமார் 10 வருடங்கள் பிரான்ஸில் பணிபுரிந்து விட்டு நாடு திரும்பிய ஒருவர் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுந்தே நபரிடமிருந்து 2 கிலோ 414 கிராம் நிறையுள்ள நகைகள் மீட்கப்பட்டுள்தோடு தனது பயணப் பையில் சூசகமான முறையில் மறைத்து வைத்திருந்ததாகவும்  சுங்கத் திணைக்களம்    குறிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் 38 வயதுடைய மாலபே பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் எனவும் சம்பவம் தொடர்பில் சுங்கத்திணைக்களம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!