அனுமதியின்றி இரத்தினக்கல் தோண்டிய குழுவொன்று கைது

Prathees
2 years ago
அனுமதியின்றி இரத்தினக்கல் தோண்டிய குழுவொன்று கைது

தேயிலை தோட்டத்தில் அனுமதிப்பத்திரம் இன்றி இரத்தினக்கல் தோண்டி சுற்றாடல் பாதிப்பை ஏற்படுத்திய நான்கு (26) சந்தேகநபர்கள் நேற்று  கைது செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டியாகலை தேயிலைத் தோட்டத்தில் சட்டவிரோதமான முறையில் ஆட்கடத்தல் குழுவொன்று இரத்தினக்கல் அகழ்வதாக  கிடைத்த இரகசிய தகவலின் பேரில், பொகவந்தலாவ பொலிஸ் அதிகாரிகள் நேற்று  அதிகாலை சுற்றிவளைத்து சந்தேக நபர்களை கைது செய்தனர்.

சந்தேகநபர்கள் நால்வரையும் கைது செய்யும் போது, ​​அனுமதியின்றி இரத்தினக்கல் தோண்டிக் கொண்டிருந்த மேலும் ஐவர் தப்பிச் சென்றுள்ளனர்.

தப்பிச் சென்ற சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் இரத்தினக்கற்கள் அகழ்வதற்கு பயன்படுத்திய பல உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதோடு, கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பொகவந்தலாவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.

 சந்தேகநபர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!