இலங்கை அரசாங்கத்திடம் நீதி இல்லை! ஐக்கிய நாடுகளிடம் நீதி கோரும் தனியார் பேரூந்து உரிமையாளர்கள்!
Reha
2 years ago

கடந்த மே 09 அன்று நாடு முழுவதும் வன்முறை வெடித்த போது எரிக்கப்பட்ட பேரூந்துகளுக்கான காப்பீட்டுத் தொகையோ இழப்பீடுகளோ கிடைக்கவில்லை என்று இலங்கையின் தனியார் பேரூந்து உரிமையாளர்கள் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திடம் முறையிட்டுள்ளனர்.
இந்த வன்முறையின்போது 50 பேரூந்துகள் வரை எரியூட்டப்பட்டன. இது தொடர்பில் காவல்துறையிடம் முறையிட்டபோதும் நியாயம் கிடைக்கவில்லை.
இதனையடுத்தே சர்வதேசத்திடம் முறையிடவேண்டிய நிலை ஏற்பட்டது என்று தனியார் பேரூந்து உரிமையாளர் சங்க தலைவர் கெமுனு விஜயரத்ன இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதன்படி ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையிலும், ஐரோப்பிய ஒன்றியத்திடமும் நீதி கேட்டு முறைப்படி முறைப்பாடு செய்துள்ளதாக விஜேரத்ன கூறியுள்ளார்.



