பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ இடம்பெற்ற வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழா!

Reha
2 years ago
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ இடம்பெற்ற வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழா!

வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழா பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றது.
 
இன்று காலை 6.15 அளவில் இடம்பெற்ற வசந்த மண்டபப் பூஜையைத் தொடர்ந்து, சண்முகப்பெருமான் தேரில் எழுந்தருளி அடியார்களுக்கு அருள் பாலித்தார். 
  
அடியார்கள் அங்கப் பிரதட்சணம் செய்தும் அடி அழித்தும் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றியதுடன், நூற்றுக் கணக்கான காவடிகளும் வருகை தந்திருந்தன. 

அத்துடன், நல்லூர் கந்தசுவாமி கோவிலின், புனருத்தாபணம் செய்யப்பட்ட சித்திரத்தேர் வெள்ளோட்டம் நேற்று காலை இடம்பெற்றது.  

நல்லூர் மகோற்சவ திருவிழாவின் தேர்த்திருவிழா இன்று இடம்பெற்றதுடன், நாளை வெள்ளிக்கிழமை தீர்த்த திருவிழா நடைபெறவுள்ளது.

நல்லூர் திருவிழாவுக்காக இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் புலம்பெயர் தேசங்களில் இருந்தும் பெரும்பாலான மக்கள் வருகை தந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!