காலி முகத்திடல் தாக்குதல்களுக்கு காவல்துறை அதிகாரி தேசபந்து தென்னகோன் முக்கியப் பொறுப்பானவர் - உபுல் ஜயசூரிய

காலி முகத்திடல் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தின் மீது, மே 9 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு காவல்துறை அதிகாரி தேசபந்து தென்னகோன் முக்கியப் பொறுப்பானவர் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்க முன்னாள் தலைவர் உபுல் ஜயசூரிய குற்றம் சுமத்தியுள்ளார்.
மே 9 ஆம் திகதி தாக்குதலுக்கு சிரேஷ்ட காவல்துறை அதிபர் தேசபந்து தென்னகோன் பொறுப்புக் கூற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைதியான போராட்டக்காரர்கள் எவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று உறுதியளித்த தேசபந்து தென்னகோன், பின்னர் அமைதி ஆர்ப்பாட்டம் மீது தாக்குதல் நடத்த அனுமதித்தார் என்றும் உபுல் ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.
ராஜபக்ச ஆதரவாளர்களை முதலில் 'மைனகோகம' மீது தாக்க அனுமதித்தவரும், பின்னர் காலி முகத்திடலின் பிரதான போராட்ட தளத்தை நோக்கி அவர்களை செல்ல அனுமதித்தவரும் தென்னகோனாவார் என்று ஜயசூரிய தெரிவித்துள்ளார்.



