எரிபொருள் இறக்குமதி தொடர்பில் சந்தேகத்திற்கு இடமான நடவடிக்கைகள் இடம்பெறுகினறமை தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் - பாட்டலி சம்பிக்க ரணவக்க
Kanimoli
3 years ago
எரிபொருள் இறக்குமதி தொடர்பில் சந்தேகத்திற்கு இடமான நடவடிக்கைகள் இடம்பெறுகினறமை தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
அதிபர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதம் மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு அந்நிய செலாவணி பற்றாக்குறை இருந்தபோதிலும், எரிபொருள் இறக்குமதியின் போது குறிப்பிட்ட சில சந்தர்ப்பங்களில் மூன்றாம் தரப்பினர் பயனடைவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.