விசேட புலனாய்வு பிரிவின் குழுவொன்று கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் திடீரென்று பரிசோதனை
Kanimoli
2 years ago

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவின் குழுவொன்று கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் திடீரென்று பரிசோதனையை மேற்கொண்டுள்ளது.
தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் பணிப்புரைக்கமைய, கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள அலுவலக பணிகளை குறித்த குழுவினர் பார்வையிட்டுள்ளனர்.
வெளிநாடுகளுக்கு தொழில் நிமித்தம் செல்லும் புலம்பெயர்ந்தோரின் விவகாரங்கள் அவர்கள் நடத்தப்படும் விதம், சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்குச் செல்ல வருபவர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் போன்றவற்றையும் விசாரணைக் குழு அவதானித்துள்ளது.
பணியகத்தின் விமான நிலைய பிரிவின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பிலும் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.



