இலங்கைக்கு தற்போது வாஸ்து சரியில்லை, எப்படி இருந்தாலும் அதனை மாற்றி வைக்க முடியாது - பிரபல எண்கணித ஜோதிடர் செல்வன்

Kanimoli
2 years ago
இலங்கைக்கு தற்போது வாஸ்து சரியில்லை, எப்படி இருந்தாலும் அதனை மாற்றி வைக்க முடியாது - பிரபல எண்கணித ஜோதிடர் செல்வன்

இலங்கைக்கு தற்போது வாஸ்து சரியில்லை, எப்படி இருந்தாலும் அதனை மாற்றி வைக்க முடியாது. ஆனால்  அதனை மாற்றி வைப்பதற்கான வாய்ப்பை இலங்கையே ஏற்படுத்தப் போகின்றது என பிரபல எண்கணித ஜோதிடர் செல்வன் குறிப்பிட்டுள்ளார். 

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் பாலம் அமைத்தால் வாஸ்து பிரகாரம்  இந்தியாவுடன் இலங்கை இணைந்து கொள்ளும் எனவும், இதனால் கண்டிப்பாக மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இன்னொரு விடயம் என்னவென்றால், புத்தபெருமானின் போதனைகள் உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.  நீதி, நேர்மை, ஒழுக்கம், கட்டுப்பாடு, அன்பு, அமைதி, பொறுமை, சகிப்புத் தன்மை, அடக்கம் இதையெல்லாம் போதித்தவர் புத்தபெருமான். 

இந்தியாவில் பிறந்தவர் புத்த பெருமான்.  ஆனால் உலக நாடுகள் பல இன்று புத்தபெருமானை ஏற்றுக் கொண்டிருக்கின்றன. சீனா, சிங்கப்பூர், தாய்லாந்து, ஜப்பான் போன்ற நாடுகள் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியுள்ளன. 

ஆனால் இலங்கையால் அந்த இடத்தை அடைய முடியவில்லை.  ஏனென்றால் இலங்கையில் வாஸ்து சரியில்லை என்பதே உண்மை எனவும் ஜோதிடர் கூறியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!