அரச நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளமில்லாத வெளிநாடு செல்வதற்கான விடுமுறையை பெற்றுக் கொள்வது தொடர்பான சுற்றறிக்கை வெளியீடு
Kanimoli
3 years ago
அரச நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளமில்லாத வெளிநாடு செல்வதற்கான விடுமுறையை பெற்றுக் கொள்வது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான சுற்றறிக்கை திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தனவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
அரச ஊழியர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
இதேவேளை அரச ஊழியர்களை இன்று முதல் வழமை போன்று பணிக்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கான சுற்றறிக்கை திறைசேரியின் செயலாளரால் அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் நெருக்கடி காரணமாக சில மாதங்களாக அரச ஊழியர்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சேவைக்கு அழைக்கப்பட்டு வந்தனர்.
எனினும் தற்போது நிலைமை சீரடைந்துள்ளதாக அரசாங்கம் கருதுகின்ற நிலையில், அரச ஊழியர்களை வழமை போன்று சேவைக்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.