ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேக்கிற்கும் இடையில் முக்கிய சந்திப்பு!

Mayoorikka
2 years ago
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேக்கிற்கும் இடையில் முக்கிய சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேக்கிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்தில் இன்றைய தினம் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஜப்பானியப் பேரரசர் ஹிரோனோமியா நரஹிட்டோவின் வாழ்த்துகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தெரிவித்த ஜப்பானியத் தூதுவர், ஜனாதிபதியுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார்.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன, ‘சென்பிரான்சிஸ்கோ சமாதான மாநாட்டில்’ உரையாற்றி, 70 ஆண்டுகள் நிறைவடையவுள்ளன.

இதனை முன்னிட்டு ஜப்பான் தூதரகமும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள விசேட நிகழ்ச்சி, செப்டெம்பர் மாதம் 6ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்தநிலையில் குறித்த விடயம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!