கடந்த வருடம் ஸ்ரீலங்கா டெலிகொம் 10,230 கோடி லாபம் ஈட்டியுள்ளது

ஸ்ரீலங்கா டெலிகொம் கடந்த 2021ஆம் ஆண்டில் 10,230 கோடி ரூபாவை இலாபம் ஈட்டி சாதனை படைத்துள்ளது.
கடந்த ஆண்டுடன் (2020) ஒப்பிடுகையில் இது 12 சதவீத இலாப வளர்ச்சியாகும் என டெலிகாம் குழுமத்தின் தலைவர் ரோஹான் பெர்னாண்டோ தெரிவித்தார்.
நஷ்டத்தில் இயங்கும் பொது நிறுவனங்களை மறுசீரமைப்பது தொடர்பாக அண்மையில் இடம்பெற்ற பேச்சில் தொலைத்தொடர்பு குழுமம் குறிப்பிடப்பட்டமை பிழையானது என தாம் கருதுவதாகவும் தலைவர் குறிப்பிட்டார்.
தொலைத்தொடர்பு குழுமம் 2021 ஆம் ஆண்டு நேரடி மற்றும் மறைமுக வரிகளாக 1,930 கோடி ரூபாவை இலங்கை அரசாங்கத்திற்கு செலுத்தியுள்ளதாக தெரிவித்த தலைவர், அந்த வருடத்தில் 180 கோடி ரூபா மாத்திரமே திறைசேரிக்கு ஈவுத்தொகையாக செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஏற்கனவே தனியார்மயமாக்கப்பட்ட ஸ்ரீலங்கா டெலிகொம் குழுமம் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக இலாபம் ஈட்டி வருவதாகவும் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
கோவிட் தொற்றுநோய்களின் போது ஊழியர்களின் நலனுக்காக சிறந்த சேவையை ஆற்றியதன் மூலம் பொருளாதாரத்திற்கு சிறந்த சேவையை செய்ததாகவும் அவர் கூறினார்.
ஸ்ரீலங்கா டெலிகொம் குழுமம் 2022 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் முன்னைய வருடத்துடன் ஒப்பிடுகையில் 6 வீத வளர்ச்சியை அடைந்து 5290 கோடி ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளதாக அவர் கூறினார்.



