துபாயில் இணையதளத்தில் பண மோசடி செய்த மூன்று நபர்களுக்கு மூன்று மாதங்கள் சிறை தண்டனை
Prasu
3 years ago
ஆசியாவை சேர்ந்த மூன்று நபர்கள் இணைந்து துபாயில் ஆன்லைனில் வளர்ப்பு நாய் ஒன்று விற்பனைக்கு இருப்பதாக விளம்பரம் செய்திருக்கிறார்கள். அதனை வாங்க ஒரு நபர் முன் வந்திருக்கிறார். அந்த நபரிடம் அவர்கள் தங்களின் வங்கி கணக்கிற்கு குறிப்பிட்ட பணத்தை செலுத்துமாறு தெரிவித்துள்ளனர்.
அந்த நபரும் பணத்தை செலுத்தியிருக்கிறார். ஆனால், அவர்கள் கூறியபடி நாயை தரவில்லை. எனவே, அவர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அந்த மோசடி கும்பலை கைது செய்தார்கள்.
அதனைத்தொடர்ந்து நீதிமன்றத்தில் மூவருக்கும் தலா மூன்று மாதங்கள் சிறை தண்டனை மற்றும் 4000 திர்ஹாம் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. சிறை தண்டனை முடிந்த பின் அவர்கள் நாடு கடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.