ஊழல் வழக்கு: மலேசிய முன்னாள் பிரதமரின் சிறைத் தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

Prasu
2 years ago
ஊழல் வழக்கு: மலேசிய முன்னாள் பிரதமரின் சிறைத் தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

மலேசியாவில் நஜிப் ரசாக் பிரதமராக இருந்த போது, அந்நாட்டின் அரசு முதலீட்டு நிதி அமைப்பான 1 எம்.டி.பி. நிறுவனத்தில் 4,500 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. 

மலேசியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த புகார் தொடர்பாக அவருக்கு சொந்தமான சொத்துக்கள் மீது மலேசிய ஊழல் தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தப்பட்டு ஏராளமான நகை மற்றும் பணம் கைப்பற்றப்பட்டது. 

இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், நஜிப் ரசாக் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானதால் அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.  

இந்த தீர்ப்பை எதிர்த்து நஜிப் ரசாக், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. 

அப்போது நஜிப் ரசாக்கிற்கு உயர் நீதிமன்றம் விதித்த 12 ஆண்டு சிறைத்தண்டனையை உறுதி செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். உயர் நீதிமன்ற நீதிபதி அளித்த தீர்ப்பு சரியானது என்றும், நஜிப்பின் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். 

அத்துடன் நஜிப்பின் தண்டனையை உறுதி செய்தனர். எனவே, நஜிப் உடனடியாக சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும். முதல் முன்னாள் பிரதமர் ஒருவர் மலேசியாவில் சிறையில் அடைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!