கடந்த மே மாதம் 09ம் திகதி பேரே வாவியில் தள்ளிவிடப்பட்ட நபர்கள் தொடர்பில் பொலிசார் விசாரணை
Kanimoli
2 years ago

கடந்த மே மாதம் 09ம் திகதி பேரே வாவியில் தள்ளிவிடப்பட்ட நபர்கள் தொடர்பில் பொலிசார் விசாரணையொன்றை ஆரம்பித்துள்ளனர்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் உட்பட 20 பேர் இவ்வாறு பேரே வாவியில் தள்ளிவிடப்பட்டனர்.
காலி முகத்திடல் தாக்குதல் சம்பவத்தின் பின்னர் வன்முறையில் இறங்கிய ஒரு குழு திட்டமிட்ட அடிப்படையில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.
இவர்களில் சில பெண்களும் உள்ளடங்குகின்றனர். இது தொடர்பில் கொழும்பு வேகந்த பகுதியில் ஒருவர் அண்மையில் கைது செய்யப்பட்டனர்.
இந்த கலவரத்தின் போது முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்ததுடன், அமைச்சரவை அமைச்சர்களும் ராஜினாமா கடிதங்களை கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



