இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலினிடம் மோதர பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் பதிவு
Nila
2 years ago

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலினிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக இன்று மோதர பொலிஸ் நிலையத்திற்கு அவர் அழைக்கப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜூலை 13 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் நடந்த ஒரு கூட்டத்தில் பங்குப்பற்றியது தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காகவே அவர் மோதர பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக அவர் மீது நாளை 24ம் திகதி வழக்கு உள்ளதால், இன்று அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.



