இலங்கையில் மழை பெய்யவுள்ள மாகாணங்கள் குறித்து வளிமண்டளவியல் திணைக்களம் தகவல் வெளியீடு

Kanimoli
2 years ago
இலங்கையில் மழை பெய்யவுள்ள மாகாணங்கள் குறித்து வளிமண்டளவியல் திணைக்களம் தகவல் வெளியீடு

இலங்கையில் மழை பெய்யவுள்ள மாகாணங்கள் குறித்து வளிமண்டளவியல் திணைக்களம் புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

அந்தவகையில் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் குருநாகல், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

மேற்குறிப்பிட்ட சிலஇடங்களில் 75 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கபடுவதாகவும் அறிவித்துள்ளது.

அதேவேளை, ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப்பகுதிகளிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50km வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மேலும், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்களிடம் வளிமண்டளவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!