காலியில் ஆடை விற்பனை நிலையமொன்று தீயினால் முற்றாக எரிந்து நாசம்
Prathees
2 years ago

காலி, மாகல்ல பகுதியில் உள்ள ஆடை விற்பனை நிலையமொன்றில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில்இ கடை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
தீயை அணைக்கும் பணியில் காலி மாநகர தீயணைப்பு திணைக்களம் மற்றும் கடற்படை தீயணைப்பு திணைக்களத்தின் மூன்று தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீ விபத்துக்கான காரணம் மின் கசிவு என சந்தேகிக்கப்படுவதுடன், தீயினால் ஏற்பட்ட சேதம் இதுவரை மதிப்பிடப்படவில்லை என காலி துறைமுக பொலிஸார் தெரிவித்தனர்.



