உணவு விலை பணவீக்கத்தில் இலங்கை 5வது இடத்தில்!- உலக வங்கி
Prathees
2 years ago

உணவுப் பொருட்களின் விலையேற்றம் அதிகம் உள்ள நாடுகளில் இலங்கை 5வது இடத்தைப் பெற்றுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
நிறுவனம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, உணவுப் பொருட்களின் விலையேற்றம் அதிகம் உள்ள நாடு லெபனான்.
சிம்பாப்வே, வெனிசுலா மற்றும் துருக்கி ஆகியவை உணவுப் பிரிவில் பணவீக்கத்தின் அடிப்படையில் இலங்கையை விட உயர்ந்த இடத்தில் உள்ளன.
இதேவேளை, தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி, கடந்த ஜூலை மாதம் இந்த நாட்டில் பணவீக்கம் 66.7 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாத பணவீக்க விகிதத்துடன் ஒப்பிடுகையில் இது 7.8 சதவீதம் அதிகமாகும்.
கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 75.8 சதவீதமாக இருந்த உணவுப் பணவீக்கம் ஜூலை மாதத்தில் 82.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.



