சோமாலியாவில் ஓட்டலில் புகுந்த தீவிரவாதிகள் தாக்குதல்- 40 பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழப்பு

Prasu
2 years ago
சோமாலியாவில் ஓட்டலில் புகுந்த தீவிரவாதிகள் தாக்குதல்- 40 பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழப்பு

கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் அரசுக்கு எதிராக அல்- ஷபாப் பயங்கரவாத இயக்கம் தாக்குதல் நடத்தி வருகிறது. அல்-கொய்தா ஆதரவு பெற்ற இந்த இயக்கம் ராணுவ வீரர்கள், போலீசார், பொதுமக்களை குறிவைத்து அடிக்கடி தாக்குதல் நடத்துகிறது. 

தீவிரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்தநிலையில் தலைநகர் மொகாதிசுவில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் நேற்று முன்தினம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். 

வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட இரண்டு கார்களை ஓட்டலின் நுழைவு வாயிலில் மோத செய்து வெடிக்க வைத்தனர். பின்னர் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டபடி ஓட்டலில் புகுந்து அங்கிருந்தவர்களை பணய கைதிகளாக பிடித்தனர். 

உடனே பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் ஓட்டலை சுற்றி வளைத்தனர். அப்போது தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. தீவிரவாதிகள் அடிக்கடி குண்டுகள் வீசியும் தாக்குதல் நடத்தினர். 

ஓட்டலில் பால்கனியில் இருந்து தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படையினரும் எதிர்தாக்குதல் நடத்தினர். ஓட்டலுக்குள் சிக்கியுள்ள பணய கைதிகளை மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 

இரு தரப்பினருக்கு இடையே நேற்று முழுவதும் சண்டை நீடித்தது. ஓட்டலுக்குள் பாதுகாப்பு படையினர் அதிரடியாக புகுந்து தீவிரவாதிகளுடன் சண்டையிட்டனர். 

இதில் தீவிரவாதிகள் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அங்கிருந்த பணய கைதிகள் மீட்கப்பட்டனர். 

தீவிரவாதிகள் தாக்குதலில் 40 பொதுமக்கள் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. 70 பேர் காயம் அடைந்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!