அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் உறவினர் வீட்டிலிருந்து சிறுமியொருவரின் சடலம் மீட்பு
Prathees
2 years ago

அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் உறவினர் வீட்டில் பணிப் பெண்ணாக பணியாற்றி வந்த, மலையக சிறுமி ஒருவர் நேற்று முன்தினம் நீச்சல் தடாகத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மஸ்கெலியா -மொக்கா தோட்டத்தைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் கடந்த ஆறு மாத காலமாக அமைச்சரின் சிறிய தந்தையின் வீட்டில் பணியாற்றி வந்துள்ளார்.
குறித்த சிறுமி நீச்சல் தடாகத்தில் வழுக்கி விழுந்தமைக்கான CCTV காட்சிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ள நிலையில்,சம்பவம் தொடர்பான விசாரணைகளை கம்பஹா மற்றும் மஸ்கெலியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.



