ரஞ்சனுக்கு எப்போது விடுதலை கிடைக்கும்? நீதி அமைச்சர் தெரிவித்த கருத்து

Prathees
2 years ago
ரஞ்சனுக்கு எப்போது  விடுதலை கிடைக்கும்? நீதி அமைச்சர் தெரிவித்த கருத்து

சிறையில் உள்ள ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அடுத்த வாரம் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்படும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்க தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தாம் ஏற்கனவே ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக  அமைச்சர் குறிப்பிட்டார்.

இழைக்கப்பட்ட குற்றத்துக்காக மன்னிப்புக் கோரும் கடிதத்தில் ரஞ்சன் ராமநாயக்கவும் கையொப்பமிட்டதாக அவரது சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு கடந்த ஜனவரி மாதம் 12ஆம் திகதி உச்ச நீதிமன்றினால் 04 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அவர் முதலில் அங்குனுகொலபலஸ்ஸ சிறையில் அடைக்கப்பட்டார்.

அதன் பின்னர், ரஞ்சன் ராமநாயக்க, தற்போதுள்ள உடல்நிலை சரியில்லாத நிலையில் சிகிச்சைக்காக வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

தற்போது, ​​சிறை மருத்துவமனையில் தனித்தனியாக பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!