நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் ஶ்ரீ குமார கோபுர கலசாபிஷேகம் இன்று இடம்பெற்றுள்ளது
Kanimoli
2 years ago

நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் ஶ்ரீ குமார கோபுர கலசாபிஷேகம் இன்று(19) கார்த்திகை உற்சவ தினத்தில் காலை 7மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்த ஶ்ரீ குமார கோபுர கலசாபிஷேக நிகழ்வு, குமரேஷ் சயந்தன் குமாரதாஸ் மாப்பாண முதலியார் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் வடக்கு திசையில் அமைந்துள்ள குமார இராஜகோபுரத்திற்கு உள்ளக கோபுரமாக குபேர திக்கு குமார கோபுரம் மற்றும் குமார மணிக்கோபுரம் ஆகியன இந்த வருட திருப்பணியாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் இந்த நிகழ்வில் பெருமளவிலான பக்தர்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.



