தொழுகையின் போது ஆப்கானிஸ்தானில் மசூதியில் குண்டு வெடிப்பு- 21 பேர் உயிரிழப்பு
#Afghanistan
#BombBlast
#Death
Prasu
2 years ago

ஆப்கானிஸ்தானில் ஷியா, சன்னி பிரிவினர் இடையே அடிக்கடி மோதல் நடைபெற்று வருகிறது. சமீபகாலமாக நடந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பிரசித்தி பெற்ற மசூதியில் நேற்று ஏராளமானோர் வழக்கமான தொழுகைக்கான குவிந்தனர்.
அப்போது மசூதிக்குள் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் 21 பேர் மேற்பட்டோர் உடல் சிதறி பலியாயினர். 33 பேர் காயமடைந்துள்ளனர்.
தகவலறிந்த மீட்புப் படையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குண்டு வெடிப்புக்கான காரணம் குறித்து ஆப்கன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.



