கார்கிவ் நகரின் மீது ரஷ்ய ராணுவம் ஏவுகணைகள் மற்றும் கையெறி குண்டுகளை வீசி தாக்கியதில் மூவர் பலி

#Russia #Missile #Attack #Ukraine
Prasu
2 years ago
கார்கிவ் நகரின் மீது ரஷ்ய ராணுவம் ஏவுகணைகள் மற்றும் கையெறி குண்டுகளை வீசி தாக்கியதில் மூவர் பலி

உக்ரைன் மீது ரஷிய படைகள் கடந்த பிப்ரவரி மாதம் முதல் போர் தொடுத்து வருகிறது. தற்போது வரை தொடர்ந்து வரும் இந்த தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. 

இந்த போரால் உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக வெளியேறியுள்ளனர். இரு தரப்பிலும் மிகப்பெரிய் அளவில் உயிர்சேதமும் ஏற்பட்டுள்ளது. 

உக்ரைன் மீது தொடர் தாக்குதல்களை நிகழ்த்தி வரும் ரஷிய ராணுவம், அந்நாட்டின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி வருகிறது. 

இதற்கிடையே, கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனிய பகுதிகளில் கடுமையான போர் நடைபெற்று வருகிறது. அங்குள்ள கார்கிவ் நகரில் கடந்த திங்கட்கிழமை நடந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார், 

மேலும் 6 பேர் காயமடைந்தனர். இந்நிலையில், நேற்று மீண்டும் கார்கிவ் நகரின் மீது ரஷிய ராணுவம் ஏவுகணைகள் மற்றும் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. 

இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர் என தகவல் வெளியாகியுள்ளது. ரஷிய படைகளின் தாக்குதல்களுக்கு உக்ரைனிய படைகள் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றன

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!