இயற்கை உரங்களைப் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு மானியம்
Prathees
2 years ago

அடுத்த பருவத்தில் நெற்செய்கைக்காக இயற்கை உரங்களைப் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு 20,000 ரூபா மானியம் வழங்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அதற்காக செலவிடப்படும் என எதிர்பார்க்கப்படும் தொகை 1,600 கோடி ரூபாவாகும் என அமைச்சர் தெரிவித்தார்.
இலங்கையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த உரங்களை உற்பத்தி செய்யும் தொழில் அதிபர்களுடன் நடத்திய கலந்துரையாடலில் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
விவசாயத் திணைக்களம் மற்றும் விவசாயத் துறை தொடர்பான அறிஞர்கள் எதிர்வரும் காலங்களில் நெல் சாகுபடியில் 70 வீத இரசாயன உரங்களையும் 30 வீத இயற்கை உரங்களையும் பயன்படுத்துமாறு விவசாய அமைச்சுக்கு பரிந்துரை செய்திருந்தனர்.



