ஜம்மு காஷ்மீரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் வீட்டில் தற்கொலை - தீவிர விசாரணையில் போலீசார்
#Suicide
Prasu
2 years ago

ஜம்மு காஷ்மீரில் தோடா மாவட்டத்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
அதன்படி நூர் உல் ஹபீப், சஜத் அகமது, ஷகினா பேகம்,நசீமா அக்தர்,ருபினா பனே, ஜாபர் சலீம் போன்றோர் தான் உயிரிழந்தவர்கள் ஆவர்.
ஆறு பேரும் விஷம் குடித்து உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. ஆனால் அவர்களின் சடலங்களை மீட்டு உள்ள போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதில் இந்த தற்கொலைக்கான காரணம் என்னும் வெளியாகவில்லை. மேலும் சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்ற நிலையில் விரைவில் அடுத்த கட்ட தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.



